இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி; மனவ் பவுலிங்கில் அசத்தல்
காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய மனவ் சுதார் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
காலே மைதானத்தில் கடந்த 15ம் தேதி துவங்கிய போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 462 ரன் குவித்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 167 ரன் குவித்தார். அடுத்ததாக விளையாடிய இலங்கை அணி, 284 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், தினுஷாவும் (100), டிக்வெல்லாவும் (80) அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
178 ரன் முன்னிலையில் 2வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. பன்ட் (66), படிக்கல் (44), கேஎல் ராகுல் (35) ஆகியோரை தவிர்த்து வேறு யாரும் இரண்டு இலக்க ரன் குவிக்க வில்லை. இதனால், 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணிக்கு 372 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நேற்று 4ம் நாள் ஆட்ட நேரமுடிவில் முன்னணி விக்கெட்டுகளை இழந்து, 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன் சேர்த்திருந்தது. இந்த நிலையில், 5ம் நாள் ஆட்டம் துவங்கியதும், டி சில்வா (59), தினுஷா (84) ஆகியோர் மட்டுமே ஒரளவுக்கு தாக்கு பிடித்தனர். எஞ்சிய வீரர்கள் சீரான இடைவெளியில் நடையை கட்டினர்.
இதனால், அந்த 206 ரன்னுக்கு சுருண்டது. இதன்மூலம், 165 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய மனவ் சுதார் 6 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், சிராஜ், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மேலும்
-
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
-
மகளை காணவில்லை தாய் போலீசில் புகார்
-
பீஹாரில் சத்துணவு சாப்பிட்ட பள்ளிக்குழந்தைகள் 40 பேர் மயக்கம்: உப்புக்கு பதில் சோப்பு பவுடர் கலந்தது விசாரணையில் அம்பலம்
-
வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
செய்தி சாரல்