அரசு கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஓ.எஸ்., நீக்கம்; அமெரிக்க தொழில்நுட்ப சார்பை தவிர்க்க சீனா உத்தரவு

1

பீஜிங்: அமெரிக்க தொழில்நுட்பத்தை சார்ந்து இருப்பதை குறைக்கும் வகையில், அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் இருந்து விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை நீக்கவும், லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு மாறவும் சீனா உத்தரவிட்டது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் ஏராளமான இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அமெரிக்க தொழில்நுட்பத்தை சார்ந்து இருப்பதை குறைக்கும் வகையில், அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் இருந்து விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை நீக்கவும், லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு மாறவும் சீனா உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கை வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் மீதான சார்பைக் குறைக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவை சீன அரசின் பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ளதுடன், சில அரசு சார்ந்த நிறுவனங்களை தங்களது கணினிகளிலிருந்து விண்டோஸ் பயன்பாட்டை உடனடியாக நீக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. 2027ம் ஆண்டு பிப்ரவரியில் விண்டோஸ் 10ஐ பயன்பாட்டிலிருந்து நீக்கப்படவிருந்தது.

தற்போது அமெரிக்கத் தொழில்நுட்பத்தின் மீதான தனது சார்பை சீனா குறைத்து வருவதால், திட்டமிட்டதை விட சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கியமான தரவுகளைக் கையாள்வதற்கு, உள்நாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்திற்கு மாறுமாறு அரசு நிறுவனங்களை சீனா ஊக்குவித்து வருகிறது.

விண்டோஸ் பயன்பாட்டிற்கு சீனா மட்டுமல்ல முடிவு கட்டவில்லை; இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பிரான்ஸ் தனது அனைத்து அரசு துறைகளும் விண்டோஸிலிருந்து லினக்ஸுக்கு மாற்றுவதாக அறிவித்தது. ஜெர்மனி, டென்மார்க் மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளும் மைக்ரோசாப்ட்டின் தொழில்நுட்ப பயன்பாட்டை குறைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement