குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி; 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

1

ஆமதாபாத்: குஜராத்தின் பாவ்நகரில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குஜராத்தில் நீண்டகாலமாக மதுவிலக்குக் கொள்கை அமலில் இருந்து வருகிறது. இந்த சூழலில் குஜராத்தின் பாவ்நகரில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மூவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனிலிருந்து கள்ளச்சாராயம் குஜராத்திற்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பூரண மதுவிலக்கு மாநிலமாக இருந்து வரும் குஜராத்தில் நடந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தியதோடு, குஜராத்தின் மதுவிலக்கு சட்டம் அமலில் இருப்பதை கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisement