சமூக வலைதள செயல்பாடு; பிரதமர் மோடி முதலிடம்

3



-நமது நிருபர்-




இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக் உள்ள சமூக வலைதளங்களில் மத்திய அமைச்சர்களின் செயல்பாடு குறித்த மதிப்பீட்டில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்தார்.

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்களின் சமூக ஊடகச் செயல்பாடுகள் முக்கிய விவாதப் பொருளாக அமைந்தன. தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு படைத்து வரும் சமூக வலைதளங்கள் வாயிலாக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், மத்திய அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்த விரிவான மதிப்பீட்டு அறிக்கை ஒவ்வொரு அமைச்சருக்கும் வழங்கப்பட்டது.

மே 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரையிலான காலகட்டத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகளை விவரிக்கும் மதிப்பீட்டு அறிக்கை அவர்களுக்கு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் இன்றைய இளம் தலைமுறையினரைச் சென்றடையும் முயற்சியின் ஒரு பகுதியாக, இளைஞர்களுடன் கலந்துரையாட ஒவ்வொரு நாளும் ஒரு மத்திய அமைச்சர் ஒரு பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

நாள் முழுவதும் நடைபெறும் இத்தகைய பயணங்களின்போது, ​​அமைச்சர்கள் அரசின் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள சாதனைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்; அதேவேளையில், நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த அவர்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் இப்பயணங்களை ஒருங்கிணைப்பார்கள் என முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.


@block_P@

தரவரிசையில் மோடி முதலிடம்

எதிர்பார்த்தபடியே, மே 1 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலகட்டத்திற்கான சமூக ஊடகச் செயல்பாட்டு மதிப்பீட்டுத் தரவரிசையில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்தார். இளைய தலைமுறையினரை சென்றடைய செல்பி வீடியோக்கள் மற்றும் நவீன டிஜிட்டல் உத்திகளை பிரதமர் மோடி தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறார். GenZ, Gen Alpha தலைமுறையினருடன் தொடர்பை வலுப்படுத்துங்கள் என மத்திய அமைச்சர்களுக்கு கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். அனைவரும் சமூகவலைதளத்தில் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.block_P

Advertisement