சென்சுரி பள்ளி 9ம் ஆண்டு விழா

திருப்பூர், ஆக. 23–

திருப்பூர், சென்சுரி பவுண்டேசன் பப்ளிக் பள்ளி 9-ம் ஆண்டு விழா நடந்தது. எஸ்.வி. நிறுவன நிர்வாக இயக்குனர் சிவக்குமார் தலைமை விருந்தினராகவும், பள்ளி அறங்காவலர் மனோகரன், தாளாளர் சக்திதேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்றனர். மாணவ, மாணவியரின் பாரம்பரிய, நவீன நடனங்கள், நாடகங்கள் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், கல்வி, விளையாட்டு மற்றும் 100 சதவீத வருகைப்பதிவு தந்த மாணவர்களுக்கும் பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.

––



திருப்பூர், சென்சுரி பவுண்டேசன் பப்ளிக் பள்ளி 9-ம் ஆண்டு விழா நடந்தது.

Advertisement