விவேகானந்தா குளோபல் அகாடமி அறிவியல் கண்காட்சியில் அசத்தல்

திருப்பூர்:கோவை கே.பி.ஆர் கல்லுாரியில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சி போட்டியில், திருப்பூர், பல்லடம் சாலை, கணபதிபாளையம் பிரிவில் உள்ள விவேகானந்தா குளோபல் அகாடமி பள்ளி மாணவர்கள் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 79 பள்ளிகளிலிருந்து 650 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், விவேகானந்தா அகாடமி சார்பில் 10 மாணவர்கள் 3 குழுக்களாகப் பங்கேற்று தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். சாதனை படைத்த மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரையும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

---

அறிவியல் கண்காட்சி போட்டியில், விவேகானந்தா குளோபல் அகாடமி பள்ளி மாணவர்கள் 3ம் இடம் பெற்றனர்.

Advertisement