இந்திய கம்யூ., தொகுதி பேரவை கூட்டம் 

புதுச்சேரி: இந்திய கம்யூ., தட்டாஞ்சாவடி தொகுதி குழு பேரவை கூட்டம், பாக்கமுடையான்பட்டு, தனியார் ஓட்டலில் நடந்தது. 

மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் ஹேமலதா, மோதிலால் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில நிர்வாகக்குழு நாரா கலைநாதன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சிவக்குமார், அந்தோணி, எழிலன், மாநில பொருளாளர் சுப்பையா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

இதில், செங்கேணி, சேகர், மாரிமுத்து, அருள்தாஸ், காந்தாராம், அய்யப்பன், சுரேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், தட்டாஞ்சாவடி தொகுதி புதுப்பேட்டை, முத்துலிங்கப்பேட்டை, பொய்யாக்குளம், வேலன் நகர், சுப்பையா நகர் பகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். லட்சுமி நகர், சின்னையன்பேட், வேலன் நகர், வினோபா நகர் பகுதிகளில் சுத்தமான குடிநீர் வழங்கிட வேண்டும்.

தட்டாஞ்சாவடி தொகுதி முழுதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை சரி செய்து, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் துார்வாரி மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்திட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement