போலீஸ் மக்கள் மன்றத்தில் 37 புகார்களுக்கு தீர்வு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில், நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அதன்படி, முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், எஸ்.பி., சுருதி ஆகியோர்  பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதேபோல், ரெட்டியார்பாளையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., வம்சீதர ரெட்டி, சைபர் கிரைமில் சீனியர் எஸ்.பி., ராகவ், போக்குவரத்து வடக்கு பிரிவில் சீனியர் எஸ்.பி., திவ்யா, எஸ்.பி., ரச்சினா சிங், திருக்கனுாரில் எஸ்.பி., சுப்ரமணியன், முதலியார்பேட்டையில் எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.

இதில், பொது மக்களிடம் இருந்து 70 புகார்கள் பெறப்பட்டு, 37 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மக்கள் மன்றத்தில் மொத்தம் 168  பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர்.

Advertisement