2ம் நாளாக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு, இரண்டாவது நாளாக வேளாண்மை சார்ந்த பணி மற்றும் தொழில்நுட்ப அலுவலர் பணிக்கு தேர்வு நேற்று நடந்தது.

புதுச்சேரி அரசு துறைகளில் உள்ள யூ.டி.சி., உட்பட 327 பணியிடங்களை நிரப்ப ஒங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்விற்காக, புதுச்சேரி, காரைக்காலில் 112 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. புள்ளியல் ஆய்வாளர் பணி, நுாலக தகவல் உதவியாளர் பணி, கள மேற்பார்வையாளர் பணிக்கு தேர்வு நடந்தது. தேர்வு அறைக்குள் மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது.

நேற்று (22ம் தேதி)  வேளாண்மை சார்ந்த பணிக்கும், தொழில்நுட்ப அலுவலர் பணிக்கும் தேர்வு நடந்தது. இன்று (23ம் தேதி) 8 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வும், யூ.டி.சி., பணிக்கு 2ம் தாள் தேர்வும் நடக்கிறது.

Advertisement