மூன்றில் ஒரு கால்நடைக்கு அடர்தீவனம் கிடைக்கவில்லை 37 சதவிகிதம் பற்றாக்குறையால் புதிய சவால்
புதுடில்லி: தேவை அதிகரிப்பால் கால்நடைக்களுக்கான அடர்தீவன பற்றாக்குறை 37.50 சதவீதமாக உள்ளது என, ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து கவுன்சில் வெளியிட்ட அறிக்கை:
நாட்டின் கால்நடை பொருளாதாரம் வேகமாக வளரும் நிலையில், அடர்தீவன பற்றாக்குறை பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மதிப்பீட்டின்படி, அடர் தீவனத்தில் 37.50 சதவீதமும், பசுந்தீவனத்தில் 14 சதவீதமும், உலர் தீவனத்தில் 2.40 சதவீ தமும் பற்றாக்குறை நிலவுகிறது.
பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து தரநிலைகளின்படி கால்நடைகளுக்கு தீவனம் வழங்கப்பட்டால், ஆண்டுக்கு 25 கோடி டன் அடர்தீவனம், 93 கோடி டன் பசுந்தீவனம் மற்றும் 48 கோடி டன் உலர் தீவனம் தேவைப்படும்.
இத்தகைய தரநிலைகளின்படி தீவனம் வழங்குவது விவசாயிகளுக்கு பொருளாதா ர ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சாத்தியமில்லை. விவசாயிகள் தங்களிடம் கிடைக்கும் தீவன அளவில், கால்நடைகளின் உற்பத்தி திறனை பொறுத்தே தீவனம் அளிக்கின்றனர்.
கால்நடை களுக்கான தீவன தேவையை பூர்த்தி செய்யும் நிலையில் நம் நாடு இருந்தாலு ம், தரமான அடர் தீவனத்தில் , பற்றாக்குறை நிலவுகிறது.

கால்நடை துறை மேம்பாட்டுக்கு அதிக அளவு தீவனத்தை உற்பத்தி செய்வது மட்டுமே தீர்வாகாது; கிடைக்கும் தீவன வளங்களை மி கவும் திறமையாக பயன்படுத்துவதும் அவசியம்.
நாட்டின் கால்நடை தீவன பற்றாக்குறை அடர் தீவனம் 37.50% பசுந்தீவனம் 14% உலர் தீவனம் 2.5% கால்நடைகளுக்கான தீவன தேவை (கோடி/டன்னில்) அடர் தீவனம் 25 பசுந்தீவனம் 93 உலர் தீவனம் 48