கொடிசியாவில் நாளை வரை 'எலக்ட்ரோடெக்' கண்காட்சி
கோவை: கொடிசியா நடத்தும் எலக்ட்ரோடெக் கண்காட்சியின் எட்டாம் பதிப்பு, கோவை கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் நடக்கிறது.
நாளை நிறைவு பெறும் இந்த கண்காட்சியை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காணலாம். நுழைவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
மின்னியல், தொழில் சார்ந்த மின்னணுவியல் துறையில் பல அதிநவீன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சியில் புதுமையான தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின்றன. தொடர்ந்து இத்துறையில் ஏற்படும் மாறுதல்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
ஸ்விட்ச் மற்றும் போர்டுகள், ஒயர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவை சேர்ந்த சன்ரேக் நிறுவனம், அலுமினியத்திலான பிட்டிங்குகளை தயாரிக்கின்றன.


நடந்து சென்று சோலார் செல்களை பார்வையிடும் வகையிலான அமைப்பு, பேனல்களை பொருத்த தேவையான கட்டமைப்புகள், ரேக்குகளை பார்வைக்கு வைத்துள்ளன. கோவையை சேர்ந்த புரபெல் நிறுவனம், எலக்ட்ரிக் ராட்சத லாரிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement