ஜவுளி சந்தை வர்த்தக இலக்கு 33.50 லட்சம் கோடி ரூபாய் மத்திய ஜவுளி துறை கமிஷனர் தகவல்
கோவை: ''2030ம் ஆண்டுக்குள் ஜவுளி துறையில் 350 பில்லியன் டாலர், அதாவது, 33.50 லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்று மத்திய ஜவுளி துறை கமிஷனர் சவுரப் குல்கர்னி கூறியுள்ளார்.
இந்திய பருத்தி கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய ப ருத்தி மாநாடு, கோவையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
மத்திய அரசு 'கபாஸ் கிராந்தி' திட்டம் வாயிலாக பருத்தியை ஊக்குவிக்க, 5,659 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பருத்தியின் தரத்தை உயர்த் துவதற்காக 'கஸ்துாரி காட்டன் இந்தியா' என்கிற பிராண்டை 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தினோம்.
பருத்தி வினியோக தொடரில் நிலைத்தன்மை மற்றும் மதிப்பு கூட்டலை அதிகரிக்கும் நோக்கில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், ஜெர்மனியின் 'ஜிஸ்' நிறுவனத்துடன் 2021ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. தற்போது இந்திய ஜவுளி சந்தையின் மதிப்பு, சுமார் 17.20 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இதை, 33.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சர்வதேச அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா 19 சதவீதம் பங்களிக்கிறது கிட்டத்தட்ட 60 லட்சம் விவசாயிகள் பருத்தி உற்பத்தியை சார்ந்துள்ளனர்.