பொறியாளர் தினத்தில் விருது வழங்கி கவுரவம்

பீளமேடு: கோவை மண்டல கட்டட பொறியாளர் சங்கம்(கொஜினா) சார்பில் பொறியாளர் தின விழா பீளமேட்டில் நடந்தது. சிறந்த பொறியாளர் விருது, வாழ்நாள் சாதனை விருது, இளம் பொறியாளர் விருது என ஏழு பேருக்கு விருது வழங்கப்பட்டன.

கல்லுாரி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தி முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு பரிசும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. சங்க செயலாளர் செந்தில்நாதன், தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் தாமோதர் சுவாமி ஆகியோர் சங்க கையேட்டை வெளியிட்டனர்.

Advertisement