மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாசுபதாஸ்திர ஜெப ஹோமம்
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் நடந்தது.
புதுச்சேரி உழவர்கரையில் பிரசித்திப்பெற்ற அகத்தீஸ்வரமுடையார் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மாதாந்திர சிவராத்திரியை முன்னிட்டு பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் நேற்று மாலை நடந்தது.
முன்னதாக அனுக்ஞை, விநாயகர் பூஜை மற்றும் பாசுபத யாகங்கள் நடைபெற்றது. இந்த யாகத்தில், முதல்வர் ரங்கசாமி, நாராயணசாமி எம்.எல்.ஏ., பங்கேற்றனர்.
தொடர்ந்து, மீனாட்சி சுந்தரேஸ்வரர், அகத்தீஸ்வரர், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, கலசாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி துரைராஜன் மற்றும் உழவர்கரை பொதுமக்கள் செய்திருந்தனர். யாகத்தினை திருக்காஞ்சி சரவண சிவாச்சார்யார் ஆகம முறைப்படி நடத்தி வைத்தார்.