‘ட்ரோன்’களை இயக்கும் பயிற்சிக்கு மத்திய அரசு அனுமதி
கம்பம்: வண்டிப் பெரியாறு அருகே அமைந்துள்ள சத்திரம் விமான நிலையத்தில் புதிதாக ட்ரோன்களை இயக்க ஆண்டிற்கு ஆயிரம் பேர்களுக்கு பயிற்சி தரும் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் வண்டிப் பெரியாறு அருகில் சத்திரம் என்ற இடத்தில், என். சி. சி. மாணவர்கள், சிறிய ரக விமானங்களை இயக்க, பயிற்சி தர சிறிய விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த விமான நிலையத்தில் என்.சி.சி. மாணவர்களுக்கு விமானங்களை இயக்க பயிற்சியுடன், புதிதாக பெரிய சைஸ் ட்ரோன்களை இயக்க பயிற்சி வழங்கும் மையம் ஒன்றையும் துவக்கி உள்ளனர். இந்த பயிற்சி மையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இங்கு ஆண்டிற்கு ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதில் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 200 பேர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் இயக்கும் பயிற்சியை மத்திய அரசின் சிவில் ஏவியேசன் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரிமோட் பைலட் ட்ரெயினிங் அமைப்பு வழங்க உள்ளது.
பயிற்சி முடித்தவர்களுக்கு தரப்படும் பைலட் சான்றிதழ், ட்ரோன்களை இயக்க தகுதி சான்றிதழாகும். மேலும் ராணுவத்தில் சேருவதற்கும் பயன்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர்: முதலிடத்தில் ஜாக் லோடன்
-
நோட் பண்ணிக்கோங்க... ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ நாளை பங்குச்சந்தைகளில் பட்டியல்!
-
டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல் இனி கட்டாயம்: விரைவில் அமல்
-
ஆந்திராவை நெருங்கும் அர்னாப் புயல்: ரயில், விமான சேவை ரத்து
-
மஞ்சள் நிறத்தில் புதிய 1000 ரூபாய் நோட்டு வெளியிடவில்லை: மத்திய அரசு
-
ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு 2 கிலோ கோதுமை மாவு!