புதுச்சேரி அரசுக்கு ரூ. 6 லட்சம் அபராதம்: மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
புதுச்சேரி: உத்தரவை அமல்படுத்தத் தவறிய புதுச்சேரி அரசுக்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரூ. 6 லட்சம் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தொகையைச் சென்னை கிண்டி, அடையாாரில் உள்ள புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி பேராசிரியர் மரியா இனிகோ என்பவர் தொடர்ந்த வழக்கில், ஊதிய விகிதம் மற்றும் ஊதிய நிர்ணயம் தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டு தீர்ப்பாயம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய தீர்ப்பாயத்தில் அன்மையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, உத்தரவை அமல்படுத்துவது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரி புதுச்சேரி அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் சுவாமிநாதன் மற்றும் நிர்வாக உறுப்பினர் ஸ்ரீவத்சவா அடங்கிய அமர்வு ,
தீர்ப்பாயம் உத்தரவிட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்தது.வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம், உத்தரவு அமலாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்ற பழைய வழக்கமான பதிலையே எதிர் தரப்பினர் கூறி வருவதாகத் தீர்ப்பாயம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகக் கண்டித்த தீர்ப்பாயம், எதிர் தரப்பினருக்கு ரூ. 6,00,000 அபராதம் விதித்தது.
இந்த அபராதத் தொகையை அடுத்த விசாரணை தேதிக்குள்(29 ம்தேதிக்குள்) அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள தீர்ப்பாயம், அன்றைய தேதிக்குள் நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. தவறினால், அனைத்து எதிர் தரப்பினரும் தீர்ப்பாயம் முன்பு நேரில் ஆஜராகி, தம்மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு வரும் 29 ம்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.
மேலும்
-
அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர்: முதலிடத்தில் ஜாக் லோடன்
-
நோட் பண்ணிக்கோங்க... ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ நாளை பங்குச்சந்தைகளில் பட்டியல்!
-
டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல் இனி கட்டாயம்: விரைவில் அமல்
-
ஆந்திராவை நெருங்கும் அர்னாப் புயல்: ரயில், விமான சேவை ரத்து
-
மஞ்சள் நிறத்தில் புதிய 1000 ரூபாய் நோட்டு வெளியிடவில்லை: மத்திய அரசு
-
ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு 2 கிலோ கோதுமை மாவு!