அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை மாவட்ட அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யூ., சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுங்கம் கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிய செயலாளர் வேளாங்கன்னிராஜ், ‘‘வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். தனியார் மூலம் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் முடிவைக் கைவிட்டு, போக்குவரத்து கழகங்களே இயக்க வேண்டும். 2003 -ல் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பென்ஷன் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். வாரிசு வேலை கேட்டு காத்திருப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்,’’ என்றார்.

சி.ஐ.டி.யூ., அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில துணை பொதுச் செயலாளர் செல்லத்துரை, ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் ஜெரோம் ரோட்டரிக்ஸ், அருணகிரிநாதன் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பரமசிவம் பங்கேற்றனர்.

Advertisement