அயர்லாந்திடம் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா

அபுதாபி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது 'டி-20' போட்டியில் அசத்திய அயர்லாந்து அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபுதாபி சென்ற தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து அணிகள் 2 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றன. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது போட்டியில் 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா 'பீல்டிங்' தேர்வு செய்தது.

அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் (52), ராஸ் அடைர் (100) நல்ல துவக்கம் கொடுத்தனர். ஜார்ஜ் டாக்ரெல் (20) ஓரளவு கைகொடுக்க, அயர்லாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 195 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் வியான் முல்டர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ரியான் ரிக்கெள்டன் (36) நல்ல துவக்கம் கொடுத்தார். ரீசா ஹென்டிரிக்ஸ் (51), மாத்யூ பிரீட்ஸ்கே (51) கைகொடுத்தனர். கேப்டன் மார்க்ரம் (8), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (9), வியான் முல்டர் (8) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 185 ரன் எடுத்து தோல்வியடைந்தது. அயர்லாந்து சார்பில் மார்க் அடைர் 4, கிரஹாம் ஹுயூம் 3 விக்கெட் சாய்த்தனர்.


இரண்டு போட்டிகள் கொண்ட தொடர 1-1 என சமன் ஆனது. இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை அயர்லாந்தின் ராஸ் அடைர் வென்றார்.



முதல் முறை


சர்வதேச 'டி-20' அரங்கில் அயர்லாந்து அணி, முதன்முறையாக தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது. இதுவரை மோதிய 7 போட்டியில், தென் ஆப்ரிக்கா 6, அயர்லாந்து ஒரு போட்டியில் வென்றன.

Advertisement