2.50 லட்சம் பேருக்கு 3 மாதத்தில் அமெரிக்க விசா


சென்னை : இந்தாண்டுக்குள், 2.50 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க துாதரக அதிகாரிகள் கூறியுள்ளதாவது:



இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சந்தித்த போது, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான முடிவுகளை எடுத்தனர்.



இதையடுத்து, இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் எரிக் கார்செட்டி, இந்தியர்களுக்கான விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தி, அதிகம் பேருக்கு விசா வழங்க உத்தரவிட்டார்.


இந்தியாவில் உள்ள ஐந்து துாதரக பிரிவுகளின் வாயிலாக, அமெரிக்காவில் படிக்க விண்ணப்பித்த தகுதியான மாணவர்கள் அனைவருக்கும் விசா வழங்கி உள்ளோம். இந்தாண்டில் மட்டும், 12 லட்சம் பேர் விசாக்கள் பெற்றுள்ளனர்.


இது கடந்தாண்டை விட, 35 சதவீதம் அதிகம். மேலும் விசாவுக்கு விண்ணப்பித்தோரில், 2.50 லட்சம் பேருக்கு இந்தாண்டுக்குள், அதாவது மூன்று மாதங்களுக்குள் வழங்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement