நீர்நிலையை பாதுகாக்க குழு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை : உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது; ஆக்கிரமிப்புகள் உள்ளன.

கழிவுநீர் கலக்கிறது. ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் மற்றும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க குழு அமைக்க வேண்டும்.

போலீசில் சிறப்பு தனிப்படை அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு, மணல் திருட்டில் ஈடுபடுவோருக்கு உடந்தையான அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: மனுதாரர் பொத்தாம் பொதுவாக புகார் தெரிவித்துள்ளார்.

எந்த நீர்நிலையில் ஆக்கிரமிப்பு உள்ளது, மணல் திருட்டு நடக்கிறது என தெளிவுபடுத்தவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement