அக்.7 முதல் 11 வரை தேசிய அஞ்சல் வார விழா

ராமநாதபுரம் : அஞ்சல் சேவைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய அஞ்சல் வார விழா இந்திய அஞ்சல் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் அஞ்சலக கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய அஞ்சல் வார விழா அக்.7 முதல் 11 வரை கொண்டாடப்படுகிறது.

அக். 7 அஞ்சல் மற்றும் பார்சல் தினம்:அன்றைய தினம் வாடிக்கையாளர்களுக்கு உள் நாட்டு, வெளி நாட்டு பார்சல் சேவை பற்றிய விளக்க கூட்டம் நடத்தப்படவுள்ளது. அனைத்து தபால் பெட்டிகளும் மின்னணு செயலாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து அஞ்சலகங்களிலும் வெளிநாட்டு பார்சல் அனுப்புவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அக்.8 ல் தபால் தலை சேகரிப்பு தினம்: அன்று பள்ளி குழந்தைகளுக்கு ''The joy of writing: importance of Letters in a Digital Age '' என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வினா- விடை போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளது.அக்.9 ல் உலக அஞ்சல் தினம்: அம்மாவின் பெயரில் ஒரு மரம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்துடன் மரக்கன்றுகள் நடும் விழா அனைத்து அஞ்சலகங்களிலும் செயல்படுத்தப்படும்.'FIT post FIT India'என்ற பிரசாரத்துடன் விழிப்புணர்வு நடை பயணம் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி அஞ்சல் அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.அக்.10 ல் சாமானியர்கள் நல்வாழ்வு தினம்: அங்கீகரிக்கப்பட்ட 31 அஞ்சலகங்களிலும் ஆதார் சேவைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைப்பதற்கு ஏற்பாடுகள் கிராமங்களில் செய்யப்பட்டுள்ளது. பாசிபட்டினம், தங்கச்சி மடம், கொத்தன்குடி, வளநாடு கிராமங்களில் சிறப்பு ஆதார் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அக்.11 ல் நிதி வலுவூட்டல் தினம்: சேமிப்பு தினம், காப்பீடு தினம் வலுவூட்டப்பட்டு ஒரே தினமாக ஒன்றிணைக்கப்பட்டு நிதி வலுவூட்டல் தினமாக கொண்டாடப்படுகிறது. விளிம்பு நிலையில் இருக்கும் சாமானிய மக்களுக்கும் அஞ்சல் துறையின் காப்பீடு மற்றும் சேமிப்பு திட்டங்களை கொண்டு சேர்ப்பதாகும்.

அன்று அனைத்து அஞ்சலகங்களிலும் மகளிர் சேமிப்பு பத்திரம், பெண் குழந்தைகள் கணக்கு, காப்பீடு எடுத்துக்கொள்வதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீர்த்தாரப்பன் தெரிவித்துள்ளார்.

Advertisement