அருப்புக்கோட்டையில் செயல்படாத ஏ.டி.எம்.,கள்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையின் வங்கிகளின் ஏ.டி.எம்.கள் பழுதாகவும், பணம் இல்லாமல் இருப்பதாலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

அருப்புக்கோட்டையில் பத்துக்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. நகரின் பல பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட பல வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் பொதுமக்கள் வங்கிகளுக்கு செல்லாமலேயே பணம் எடுக்க பணத்தை டெபாசிட் செய்ய உட்பட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முறையான பராமரிப்பு இல்லாததால், மெஷின்கள் அடிக்கடி பழுதாகிறது. மேலும், இவற்றில் பணம் தீர்ந்தவுடன் பணத்தை வைப்பதும் இல்லை. இதனால், பல ஏ.டி.எம்., மெஷின்களில், பணம் இல்லை, மெஷின் பழுது என்ற போர்டு தான் வைக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டையில் ஸ்டேட் பேங்க் கிளைக்கு தான் 5 க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். , மையங்கள் உள்ளன. சில நாட்களாக இவை இயங்கவில்லை. இதனால், அரசு அலுவலர்கள் சம்பளம் பணத்தை எடுக்க முடியாமல் திணறுகின்றனர். மக்கள், வியாபாரிகள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியவில்லை. ஆன் லைன் வசதிகள் இருந்தாலும் பணம் எடுக்க முடியாமல் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருவதை யொட்டி மக்களிடத்தில் பண புழக்கம் அதிகம் இருக்கும். ஆனால், தேவைக்கு பணத்தை எடுக்க முடியவில்லை.

நகரில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் முறையாக செயல்படவும், தூய்மையாக வைத்துக் கொள்ளவும் வங்கிகளின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஸ்டேட் பாங்க் மெயின் பிராஞ்ச் முதன்மை மேலாளர் ஜெயசுதாகர் : எங்கள் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் 2 ஏ.டி.எம்., மெஷின்கள் உள்ளன. மற்ற அனைத்தும் அவுட்சோர்சிங் முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மெஷின்கள் பழுது குறித்து நாங்கள் மேல் அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுப்போம்.

Advertisement