வேலைக்கு நிலத்தை லஞ்சம் பெற்ற வழக்கு; லாலு, அவரது மகன்களுக்கு ஜாமின்

3

புதுடில்லி: வேலைக்கு நிலத்தை லஞ்சம் பெற்ற வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன்களுக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது.



பீஹார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக, தன் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் நிலங்களை லஞ்சமாக வாங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்குகளை, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

சமீபத்தில், அமலாக்கத்துறை லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 8 பேர் மீது , புதுடில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில், இன்று(அக்.,07) பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அவரது மகன்களான தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் தலா ரூ.1 லட்சத்திற்கான பிணை தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement