அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

2

புதுடில்லி; அரபிக்கடலில் வரும் 9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;

கேரளாவின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் 9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. கிழக்கு திசை காற்று தமிழகத்தின் ஊடே செல்ல வாய்ப்பு இருக்கிறது.

அதன் எதிரொலியாக வடகிழக்கு பருவமழை தொடங்கும் சாதகமான சூழல் உருவாகலாம்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது.

இந்த முறை வடகிழக்கு பருவமழையானது எதிர்பார்ப்புக்கு மாறாக, முன்கூட்டியே தொடங்கும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக அக்டோபர் 20ம் தேதிக்கு பின்னரே பருவமழை தொடங்குவது பற்றி அறிவிப்பு வெளியாகும்.

ஆனால் தற்போது 9ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் சூழல் உள்ளதால் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று கூறலாம்.

Advertisement