தவ அமுதம் மெட்ரிக் பள்ளி விளையாட்டு தின விழா

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளி செயல் இயக்குனர் சாலை கனகதாரன் தலைமை தாங்கினார். முதல்வர் புனிதவள்ளி வரவேற்றார். பள்ளி தாளாளர் செங்கோல் விளையாட்டு தின கொடியேற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கான தனித்திறன் போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு லயன்ஸ் கிளப் முன்னாள் மாவட்ட ஆளுநர் சுவேதாகுமார், ஸ்ரீமுஷ்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். தொழிலதிபர் வாசு.ராஜேந்திரன், லயன்ஸ்கிளப் வட்டார தலைவர் பூவராகமூர்த்தி, தலைவர் நிஷாந்த், செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் தலைவர் ஜெயவேல், ரத்தினவேல், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், பரமேஸ்வரி, ஆரோக்கிய சிலம்பரசி, தமிழரசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement