குறை சொன்ன கனடாவுக்கு இந்தியா பதிலடி!

3

புதுடில்லி: பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஓட்டு வங்கி அரசியல் நடத்தி வருகிறார் என இந்தியா, இன்று கனடா அரசுக்கு பதிலடி தந்துள்ளது.


ஜூன் 2023ல் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர்
ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் காட்டி இருந்தார்.அப்போது முதல் இந்தியா கனடாவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

விரிசல் தொடர்ந்து வரும் இந்தவேளையில், இந்தியா உயர் அதிகாரி சஞ்சய் குமார் வர்மா மீது மோசமான குற்றச்சாட்டுகளை கூறிய கனடா தெரிவித்துள்ளது.
கனடாவின் இந்த குற்றச்சாட்டை அபத்தமானது என இந்தியா நிராகரித்துள்ளது

இந்திய உயர் அதிகாரி சஞ்சய் குமார் வர்மா, பலதுறைகளில் பணியாற்றி, நீண்ட அனுபவம் கொண்ட மூத்த முக்கியமான அதிகாரி ஆவார்.

ஜப்பான், சூடான், இத்தாலி, துருக்கி, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இந்தியாவின் சிறப்பு துாதராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர்.
அரசுத் துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

சமீபத்தில லாவோஸ் நாட்டிற்கு ஆசியான் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போதுகூட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இரு தரப்பு உறவு குறித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில் கனடா எங்களது அதிகாரிகளை ஆதாரம் இல்லாமல் கேவலப்படுத்துவதாகவும், தனது மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தத் தவறியதை நியாயப்படுத்த மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

Advertisement