உ.பி., யில் துர்கை சிலை கரைப்பு நிகழ்வில் இரு பிரிவினர் மோதல் கலவரம் - பதற்றம்: பலி 1

9


லக்னோ: உபி. ,யில் துர்கை சிலை கரைப்பு நிகழ்வின் போது இரு பிரிவு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். அங்கு பதற்றம் நிலவுகிறது.

உ.பி. மாநிலத்தில் நவராத்திரி பண்டிகையையொட்டி பஹாரியாச் மாவட்டத்தில் நடந்த விழாவின் முக்கிய நிகழ்வான துர்கை சிலை கரைப்பு ஊர்வலம் இன்று மாலை துவங்கியது.

ஊர்வலம் மஹாராஜ்கன்ச் நகரின் மன்சூர் கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது ஒலி பெருக்கி பாடல் அதிக சத்தத்துடன் வைக்கப்பட்டதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட இருதரப்பு வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து கலவரமாக வெடித்தது.

இதில் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பலியானதாகவும் கூறப்படுகிறது. கடைகள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.அப்பகுதி முழுதும் போர்க்களமாக காட்சியளிப்பதால் பதற்றம் காணப்படுகிறது.

உள்துறை செயலர் சஞ்சீவ் குப்தா தலைமையில் கூடுதல் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. அமிதாப் யாஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளனர்.

Advertisement