ரூ.50,000 கேட்டு மிரட்டிய கவுன்சிலரின் உதவியாளர்?
சென்னை,பெருங்குடி, எம்.ஜி.ஆர்., சாலையில், சீனிவாசன் என்பவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், சோழிங்கநல்லுார் 182வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சதீஷ்குமாரின் உதவியாளர் முருகன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கார்த்திக், மணி ஆகியோர், இந்த விடுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கிருந்த சீனிவாசனிடம், கோவில் நிகழ்ச்சிக்கு எனக் கூறி, 50,000 ரூபாய் கேட்டுள்ளனர். பணம் இல்லையென அவர் கூறியதால், மூன்று பேரும் சேர்ந்து சீனிவாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், தங்கும் விடுதியின் கழிவுநீர் இணைப்பை துண்டித்து விடுவதாக மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இது குறித்து சீனிவாசன், தரமணி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, இரண்டு தரப்பையும் அழைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement