மாநகராட்சி குறைதீர் கூட்டம்
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடந்தது.
முகாமில் சொத்துவரி திருத்தம், பெயர் மாற்றம், புதிய வரிவிதிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 106 மனுக்கள் அளிக்கப்பட்டன. துணைமேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நிர்வாக அலுவலர் ரங்கராஜன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement