உதயநிதிக்காக கோவில் பணம் செலவழிக்கலை: சேகர்பாபு
சென்னை: வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நுாலகங்களை மேம்படுத்தி, கல்வி மையம் அமைப்பதற்காக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று களஆய்வு மேற்கொண்டார்.
பின், அவர் அளித்த பேட்டி: 'ஒரு தொகுதிக்கு ஒரு நுாலகம்' என சென்னையின் பல இடங்களிலும் நுாலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்தாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்.
திராவிட மாடல் தி.மு.க., அரசு வசைப்பாடுபவர்களைப் பற்றி எந்த கவலையும் கொள்வதில்லை. வசை பாடுவோரும் வாழ்த்தும் அளவிற்கு எங்களுடைய மக்கள் பணி இருக்கும். இப்படித்தான் எங்களை முதல்வர் பணியாற்றச் சொல்லி இருக்கிறார்.
'அரசுப் பணி மற்றும் கட்சி விழாக்களுக்காக துணை முதல்வர் உதயநிதி தஞ்சாவூருக்கு செல்கிறார். அவரை வரவேற்க, கோவில் பணம் செலவிடப்படுவதாக பா.ஜ., தலைவர் ராஜா குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவர், காலை எழுந்தது முதல் இரவு வரை, தி.மு.க., மற்றும் அதன் தலைவர்கள் மீது பொல்லாங்கு பேசுவதையே வாடிக்கையாக்கி இருக்கிறார். அவர் குற்றம் சுமத்திவிட்டார்; சொன்னதை அவர் நிரூபிக்க வேண்டும். அவர் சொல்வது போல, எங்கேணும் நடந்திருந்து, அதற்கான ஆதாரத்தைக் காட்டினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகவே இருக்கிறோம்.
தி.மு.க., அரசு மீது குறை சொல்ல எதுவும் இல்லை என்பதால், இப்படியெல்லாம் இல்லாததை சொல்கின்றனர். பொய்யைக் கூட உண்மை போல பேசக்கூடியவர் தான் ராஜா. அதனால் தான், தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவராக அவரை நியமித்துள்ளனர்.
தெலுங்கர்கள் குறித்து கொச்சையாகப் பேசி விமர்சித்தார் என, நடிகை கஸ்துாரி மீது குற்றச்சாட்டு உள்ளது. யார் என்ன கருத்தை சொல்கின்றனர் என்பதை விட, கருத்தை சொல்லும் நபர் யார் என்று பார்க்க வேண்டும்.
பெருமழை பெய்தால், எப்படி குப்பை அடித்துச் செல்லப்படுமோ, அதைப் போல கஸ்துாரி போன்றவர்களெல்லாம் அரசியல் பெரு மழையில் அடித்துச் செல்லப்படுவர். அவர் குறித்தெல்லாம் பேசி, பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இவ்வாறு சேகர்பாபு கூறினார்.
வாசகர் கருத்து (41)
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
06 நவ,2024 - 16:28 Report Abuse
யாரு சொல்றது??? சேகர் பாபு ???அப்போ கோவில் பணம் உதயநிதிக்காக நிச்சயமாக அறுதியாக உறுதியாக இறுதியாக செலவழிக்கப்பட்டது தான் என்று அர்த்தம் கொள்க
0
0
Reply
sugumar s - CHENNAI,இந்தியா
06 நவ,2024 - 12:33 Report Abuse
சேகர் பாபு சார் அரசு கோவிலுக்கு எவ்வளவு செலவு செய்ததுன்னு சொல்ல முடியுமா
0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
06 நவ,2024 - 12:15 Report Abuse
வேறு எந்த விஷயங்களில் கோவில் நிதி செலவிடப்பட்டது என்று சொல்ல முடியுமா. காலம் வரும் பொறுத்திருப்போம் பொய் புனைசுருட்டு தலை தெறித்து ஓடும்.
0
0
சாண்டில்யன் - Paris,இந்தியா
07 நவ,2024 - 21:53Report Abuse
அதான் பொய் புனைசுருட்டு தலை தெறித்து ஓடிடுச்சே கனடாவுக்கு
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
06 நவ,2024 - 12:02 Report Abuse
முருகன் தமிழ் கடவுள், அவரது அண்ணண் விநாயகர் வடக்கன் வட இந்தியர் என்று சொன்னது விடியல் திராவிடனுங்கதான் .....சுவாமி அய்யப்பன் மலையாளி கேரளாக்காரர் என்று சொன்னது அம்மாநிலத்து கம்மி பினராயி ....
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06 நவ,2024 - 12:02 Report Abuse
அறநிலையத்துறை அமைச்சராக இருந்துகொண்டு உதய நிதிக்கு ஆதரவாக பேசுகிறார்.
0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
06 நவ,2024 - 11:52 Report Abuse
ஷேக் பாபு வாய் திறந்தால் பொய்தான் வரும். இவன் அறநிலையத் துறை அமைச்சர். சாபக் கேடு. வெட்கக்கேடு. உப்பிலியப்பன்கோயில் கொடிமரத்தின் தங்கத்தை விழுங்கிய மஹாபாவி. தங்கத் தகடு கொடுத்தவர் பெயர் பொரித்து இருந்த கல் வெட்டு மாயம். இது பற்றி அறநிலையத் துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையர் கப்சிப். துருவி கேட்டால் மேலிடம்? வாய் திறக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறதாம். இந்த விஷயத்தை வெளியில் சொன்னது கொடிமரதிற்கு தங்க தகடு கொடுத்தவரே. இதை துறை மறுக்கட்டும்
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
06 நவ,2024 - 11:46 Report Abuse
மதுரை முழுக்க ஒரே குப்பை குளம் துர்நாற்றம் அசுத்தம் ...அதை சரி செய்ய மதுரை பாராளுமன்றம் துப்பில்லை ....ஆனால் அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் பள்ளியில் மாணவர்கள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய கூடாதென்று அறிக்கை விட்றார்.... சிறுபான்மை நடத்தும் பள்ளியில் எந்த தமிழ் கடவுளை வாழ்த்தி பாராயணம் செய்கிறார்களாம்? முருகன் தமிழ் கடவுள் என்று சொல்லி பிரித்து வைத்தது விடியல் திராவிடனுங்கதான்.. ஆனால் வெள்ளைக்காரன் பாலை வனம் கடவுளை கும்பிட்டால் அதுதான் விடியலுக்கு சமூக நீதி ...
0
0
Reply
Sathyan - Chennai,இந்தியா
06 நவ,2024 - 11:26 Report Abuse
திருடர் சேகர் பாபு திருட்டு கூட்டம் திமுக வின் அடி வருடி என்பது மக்கள் அறிந்த ஒன்று. எந்த திருடன் தான் ஒரு திருடன் என்று ஒப்பு கொண்டுள்ளான்.
0
0
Reply
raja - Doha,இந்தியா
06 நவ,2024 - 11:26 Report Abuse
கோவில்கள் மாட்டிக்கொண்டு படாதபாடுபடுகிறது என்னை கேட்டால் அறநிலையத்துறை தேவை இல்லாத துறை கலைத்துவிட வேண்டும்.
0
0
Reply
Kanns - bangalore,இந்தியா
06 நவ,2024 - 11:14 Report Abuse
Liar Hops Parties for Conspiracy Politics incl Licking GrandFather-Father-Son etc Family for MegaLoots etc
0
0
Reply
மேலும் 30 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement