புரவி எடுப்பு திருவிழா

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி மணிகட்டி அய்யனார்- செண்பகவள்ளி அம்மன் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு அக்.29 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர்.

எட்டாம் நாளான நேற்று கருங்காலக்குடியில் இருந்து புரவிகள், சுவாமி சிலைகள் மற்றும் நேர்த்திக்கடன் சிலைகளை பக்தர்கள் 3 கி.மீ.. தொலைவில் உள்ள திருச்சுனை மந்தைக்கு கொண்டு சென்றனர்.

இன்று (நவ.6) மந்தையில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்வர். அங்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

Advertisement