கந்த சஷ்டி பாராயணம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் தினமும் மாலையில் பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

நேற்று காலை கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 30 பேர் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் பொம்மதேவன், சண்முகசுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

Advertisement