காட்டுப் பன்றிகளால் பாழாகும் பயிர்கள்

பேரையூர்,: பேரையூர், சாப்டூர், சந்தையூர், அத்திபட்டி, சேடபட்டி, டி கிருஷ்ணாபுரம் பகுதிகளில் கிணற்றுப் பாசனத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் பாழாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இப்பகுதிகளில் உள்ள கண்மாய்களை துார்வாரி பல ஆண்டுகள் ஆவதால் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து, காடுகள் போல் மாறி உள்ளது. இதில் காட்டுப் பன்றிகள் கூட்டமாக வசிக்கின்றன. இரவில் வயலுக்குள் வரும் பன்றிகள் அதிகாலை வரை பயிர்களை மேய்ந்து பாழாக்கி விடுகின்றன. இதனால் செய்வதறியாது விவசாயிகள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் பன்றிகளை விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கண்மாய்களை துார்வாரி முட்புதர்களை அகற்றினாலே காட்டுப்பன்றிகள் வேறு இடத்திற்கு பெயர்ந்து சென்றுவிடும். அதனால் வயலுக்குள் புகுவது தவிர்க்கப்படும். மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement