ஹெச்.வி., டி - 30 ராப்டீயின் 'ப்யூட்டி' மின்சார பைக்

சென்னையை சேர்ந்த 'ராப்டீ' ஸ்டார்ட் அப் நிறுவனம், 'ஹெச்.வி., டி - 30' என்ற புதிய மின்சார பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.

'ஹய் வோல்டேஜ்' கட்டமைப்பு தளத்தில் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் மின்சார பைக் என இந்நிறுவனம் கூறுகிறது. காரில் இருக்கும் சார்ஜிங் போர்ட் இந்த பைக்கில் இருப்பதால், நாடு முழுவதும் உள்ள 13,500 சார்ஜிங் நிலையங்களிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் டிசைன் எதிர்கால முன்மாதிரி பைக்கை போன்று காட்சி அளிக்கிறது.

இந்த பைக், 300 சி.சி., பைக்கிற்கு இணையாக பார்க்கப்படுகிறது. வெறும் 3.5 வினாடியில் 60 கி.மீ., வேகத்தை அடைவதாக கூறப்படுகிறது. இதன் பேட்டரி, இந்நிறுவனத்தின் சொந்த உற்பத்தி ஆலையில் மிக பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 8 ஆண்டு கள் அல்லது 80,000 கி.மீ., வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது. ஒரே சார்ஜில் 150 கி.மீ., வரை இதில் பயணிக்கலாம்.

இந்த பைக்கிற்கு, நேரடி போட்டி இல்லை என்றாலும், ராயல் என்பீல்டு கொரீலா, ஹார்லி டேவிட்சன் எக்ஸ் - 440, ட்ரையம்ப் 400 மற்றும் கே.டி.எம்., டியூக் ஆகிய பெட்ரோல் பைக்குகள் போட்டியாக இருக்கும்.

விலை- ரூ. 2.39 லட்சம்




விபரக்குறிப்பு



பேட்டரி 5.4 கி.வாட்.ஹார்.,

மோட்டார் பவர் 29.5 ஹெச்.பி.,

டார்க் 70 என்.எம்.,

ரேஞ்ச் 150 கி.மீ.,

(0 - 60 கி.மீ.,) பிக்கப் 3.5 வினாடி

டாப் ஸ்பீடு 135 கி.மீ.,

எடை 177 கிலோ

Advertisement