டாடாவை 'முட்டிமோதும்' மஹிந்திரா இரு மின்சார கார்கள் அறிமுகம்

'மஹிந்திரா' நிறுவனம், 'பி.இ.,-6.இ.,' மற்றும் 'எக்ஸ்.இ.வி.,-9.இ.,' என்ற இரு மின்சார எஸ்.யூ.வி., கார்களை வரும் நவம்பர் 26ம் தேதி உலக அளவில் அறிமுகப்படுத்த உள்ளது. இரு கார்களும் 'இன்கிலோ' என்ற மஹிந்திராவின் பிரத்யேக மின்சார கார் கட்டமைப்பு தளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

பி.இ.,-6.இ., கார், ரியர் வீல் மற்றும் ஆல் வீல் டிரைவிலும், 60 கி.வாட்.ஹார்., மற்றும் 79 கி.வாட்.ஹார்., ஆகிய இரு பேட்டரி வகையிலும் வர உள்ளது. இந்த காருக்கு, டாடா கர்வ், புதிய கிரெட்டா இ.வி., மற்றும் மாருதி இ.வி.எக்ஸ்., மின்சார கார்கள் போட்டியாக உள்ளன.

அதே, எக்ஸ்.இ.வி.,-9.இ., கார், எக்ஸ்.யூ.வி., 700 காரின் கூபே வடிவில் உள்ளது. இந்த கார் ரியர் வீல் டிரைவில் மட்டுமே வர உள்ளது. இதற்கு போட்டியாளர்கள் இல்லை என்றாலும், அதன் விலை அடிப்படையில் டாடா ஹாரியர் இ.வி., காருக்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement