என்பீல்டு பியர் 650 மலையை கட்டி இழுக்கும் 'டார்க்'
'ராயல் என்பீல்டு' நிறுவனம், 'பியர் 650' என்ற அதன் புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவன 650 சி.சி., அணிவகுப்பில், இது 5வது பைக்காகும்.
இன்டர்செப்டார் 650 பைக்கின் அதே சேசிஸ் மற்றும் இன்ஜின் தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதில் பல்வேறு தனித்துவமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதாவது, சவுகரியமாக பயணிக்க மென்மையான சஸ்பென்ஷன்கள், பின்புற டிஸ்க் 30 எம்.எம்., அதிகரிப்பு, 19 அங்குல முன்புற சக்கரம், 17 அங்குல பின்புற சக்கரம், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., வசதி, நீளமான ஹாண்டில் பார், புட் பெக் உயரம் அதிகரிப்பு, சீட் உயரம் குறைப்பு, சிங்கிள் எக்ஸாஸ்ட் அமைப்பு, இன்ஜின் டார்க் அதிகரிப்பு, புதிய ஸ்விட்ச் கியர், எம்.ஆர்.எப்., ஆப்ரோடு டயர்கள் என பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன் எடை, 216 கிலோவாக உள்ளது. இது இன்டெர்செப்டார் பைக்கை விட 2 கிலோ குறைவு. மொத்தம், ஐந்து நிறங்களில் இந்த பைக் கிடைக்கிறது.
பவர் 47 ஹெச்.பி.,டார்க் 56.5 என்.எம்.,