அமெரிக்க தேர்தலில் வெற்றி வாகை சூடிய இந்தியர்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட இந்தியர்களில் சிலர் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:
சுஹாஸ் சுப்ரமணியம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார். இவரது தந்தை சென்னையையும், தாயார் பெங்களூருவை சேர்ந்தவர்கள். குடியரசு கட்சியைச் சேர்ந்த மைக் கிளான்சியை தோற்கடித்து சுஹாஸ் சுப்ரமணியம் வெற்றி பெற்றார். தற்போது, செனட் சபை உறுப்பினராக இருக்கும் இவர், ஒபாமா அதிபராக இருந்த போது, அவரின் ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.
ஸ்ரீதனேதர்
மிச்சிகனில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதனேதார் குடியரசு கட்சி வேட்பாளர் 35 % வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாவது முறை வெற்றி பெற்றார்.
பிரமிளா ஜெயபால்
வாஷிங்டனில் பிரமிளா ஜெயபால், குடியரசு கட்சி வேட்பாளரை விட 65 சதவீத ஓட்டுகள் கூடுதலாக வெற்றி பெற்று 5வது முறை தேர்வாகி உள்ளார். ஏற்கனவே வாஷிங்டன்னில் இருந்து செனட் சபைக்கும் தேர்வாகி , அங்கிருந்து தேர்வான தெற்காசியாவை சேர்ந்த முதல் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
ராஜா கிருஷ்ணமூர்த்தி
இலினாய்சில் மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய ராஜா கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார்.இவரும் 5வது முறையாக தேர்வாகி உள்ளார். ஹார்வர்ட் பல்கலையில் படித்துள்ளார்.
ரோ கண்ணா
கலிபோர்னியாவில் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ரோ கண்ணா வெற்றி பெற்றார். ஏற்கனவே எம்.பி. பதவி வகித்த இவர், சான்பிரான்சிஸ்கோ, சிலிகான்வேலியில் இருந்து வெற்றி பெற்றார். குடியரசு கட்சியின் அனிதா சென் என்பவரை தோற்கடித்தார்.
அமி பெரா
கலிபோர்னியாவில் இருந்து அமி பெரா வெற்றி பெற்றுள்ளார். 2013 ம் ஆண்டில் இருந்து இத்தொகுதியில் இருந்து அவர் வெற்றி பெற்றுள்ளார். டாக்டரான இவர், அனைவருக்கும் ஏற்ற வகையில் மருத்துவ வசதிகள் கிடைப்பதில் கவனம் செலுத்தினார்.
ஜெரேமி கூனே
நியூயார்க்கில் இருந்து ஜெரேமி கூனே பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார். முதலில் 2020ல் வெற்றி பெற்ற இவர், போக்குவரத்து குழுவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவர்கள் தவிர்த்து, அரிசோனாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமிஷ் ஷா முன்னிலையில் உள்ளார். பிரசாத் ரெட்டி, ராகேஷ் மோகன், ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ளனர். அந்த பகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை இன்னும் முடியடையவில்லை.