25 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை பெற்றுள்ளனர். நட7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட்

25 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
நட7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட்
ஈரோடு, நவ. 7-
ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த, 25 மாணவ, -மாணவிகள், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ப்பாண்டு நீட் தேர்வு கடந்த மே, 5ல் நடந்தது. தேர்வு முடிவு ஜூலையில் வெளியானது. தமிழக அரசின், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவ, -மாணவிகளுக்கு சமீபத்தில் கலந்தாய்வு நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த எட்டு மாணவி
கள், 11 மாணவர்கள் என, 19 பேர், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை பெற்றுள்ளனர். ஐந்து மாணவிகள், ஒரு மாணவர் பி.டி.எஸ்., பட்டம் படிக்க சேர்க்கை பெற்றுள்ளனர். குருவரெட்டியூர், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சக்திவேல், திருவள்ளூர் மாவட்டம் இந்திரா மருத்துவ கல்லுாரியிலும், திப்பம்பாளையம் அரசு மேல்
நிலைப்பள்ளி மாணவர் கவுதம், கன்னியா
குமரி மாவட்ட மருத்துவ ஆராய்ச்சி கல்லுாரியிலும், அரச்சலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சிங்கராஜா, கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மோகனபிரியன் ஆகியோர் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியிலும், அதேபள்ளியில் படித்த மாணவி காயத்ரி, சென்னை ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவ கல்லுாரியிலும், சாலைப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மகாஸ்ரீ, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரியிலும், அந்தியூர் செல்லம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வவிக்னேஷ், கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஈஸ்வரன் ஆகியோர் கோவை மருத்துவ கல்லுாரிக்கும் தேர்வாகியுள்ளனர்.
ஒலகடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முகமது மஜூஹர், எழுமாத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மவுனீஸ், பட்டிமணியக்காரன்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த ஜெயந்தகுமார் ஆகியோர் கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரியிலும், மாத்துார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி ஜனனி, மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரிக்கும் தேர்வாகியுள்ளனர்.
சீனாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பரமேஸ்வரி, நீலகிரி மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரியிலும், தளவாய்ப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜனார்த்தனன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரியிலும், பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கவுதமி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரியிலும், பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சாருநிவேதா, தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரியிலும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிக்க தேர்வாகியுள்ளனர்.
விஜயமங்கலம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி ரீனா, கல்லுாரியை தேர்வு செய்ய இரண்டாவது கவுன்சிலிங்கிற்கு காத்திருக்கிறார். மயிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுபாபிரதா, குமாரபாளையம் ஜே.கே.கே.என். பல் மருத்துவ கல்லுாரியிலும், அரச்சலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தயனந்த்,- கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியிலும், பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மவுனிஷா, -திருவள்ளூர் பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லூரியிலும், கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்வேதா-, கன்னியாகுமரி மாவட்டம் மூகாம்பிகை பல் மருத்துவக்கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்திற்கும், வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா,- திருச்செங்கோடு விவேகானந்தா பல் மருத்துவ கல்லுாரியிலும், எ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மஞ்சு ரேகா, -கோவை ஆர்.வி.எஸ். பல் மருத்துவ
கல்லுாரியிலும் சேர்க்கை பெற்றுள்ளனர்.

Advertisement