ஆசிரியையிடம் செயின் பறித்த இருவர் கைது..

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே வெம்பூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் சாந்தி சில்வியா,54, இவர் அக். 28 ல் பந்தல்குடி புதூர் விலக்கில் பஸ் ஏறுவதற்காக சென்றபோது, டூவீலரில் வந்த இருவர் அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து பந்தல்குடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த பின்லேடன், 23, ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த அனிபா மரக்காயர்,24, ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 பவுன் செயின், ஒரு டூ வீலரை பறிமுதல் செய்தனர்.

Advertisement