பழனிசாமிக்கு ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு: தனபாலுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தடை விதித்த சென்னை ஐகோர்ட், அவருக்கு ரூ1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டு உள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது சகோதரர் தனபால், வழக்கு தொடர்பாக பேட்டியளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக்கோரியும் பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்ததுடன், ரூ.1.10 கோடியை பழனிசாமிக்கு மான நஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிட்டார்.

Advertisement