எடமச்சியில் ரூ.6 லட்சத்தில் நிழற்குடை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல்- - சாலவாக்கம் சாலையில், எடமச்சி கிராமம் உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, இந்த கிராமத்தினர், இப்பகுதி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து செல்கின்றனர்.

எடமச்சி பேருந்து நிறுத்தத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய நிழற்குடை கட்டடம் மிகவும் பழுதடைந்து பயன்பாட்டுக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இதனால், புதிய கட்டட வசதி ஏற்படுத்த அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, அப்பகுதியில் புதிய பயணியர் நிழற்குடை கட்டடம் ஏற்படுத்த, உத்திரமேரூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 6.32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, சில நாட்களுக்கு முன் அதற்கான பணி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

Advertisement