திருமண ஏக்கத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை

திண்டிவனம்:திருமண ஏக்கத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த மேல்மாவிலங்கை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரியாழ்வார் மகன் ராஜசேகர்,28; பொறியியல் டிப்ளமோ முடித்துள்ளார்.

சற்று மனநலம் பாதித்த இவர் கடந்த 3 மாதங்களாக, கோலியனுார் கூட்ரோட்டில் உள்ள மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று கடந்த 2ம் தேதி வீட்டிற்கு திரும்பினார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் உள்ளவர்களிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டார். அதற்கு, வீட்டில் இருந்தவர்கள் பிறகு பார்க்கலாம் என்றனர். அதில் மனமுடைந்த ராஜசேகர் அன்று மாலை 6:45 மணிக்கு, காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement