சகதியாக மாறிய விளையாட்டு பூங்கா

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வடமங்கலம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே, சிறுவர்கள் விளையாடு பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த பூங்காவில், சிறுவர்கள் விளையாட ஏணி, சறுக்குமரம், ஊஞ்சல் உட்பட பல்வேறு விளையாட்டு உபரகணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இருப்பினும், தற்போது போதிய பராமரிப்பின்றி உள்ள பூங்கா உள்ளது. அதனால், சிறுவர்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பூங்கா அமைக்க கொட்டப்பட்ட மண், மழை காலங்களில் சகதியாக மாறியுள்ளதால், சிறுவர்கள் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.

மேலும், சுற்றுச்சுவர் இல்லாத சிறுவர் விளையாட்டு பூங்கா அருகே, கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதோடு, விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், பெற்றோர் குழந்தைகளை பூங்காவிற்கு விளையாட அனுப்ப அச்சப்படுகின்றனர்.

எனவே, சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை பயன்படுத்தும் வகையில் சீரமைத்து, சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.

Advertisement