நோயாளியிடம் நகை திருடிய பெண் கைது
சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையைச் சேர்ந்த அருணா, 55, என்பவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த, 2ம் தேதி, இவரது அறைக்கு வந்த பெண் ஒருவர், அருணாவின் கணவர் மணியை வெளியே அனுப்பிவிட்டு, 'ஸ்கேன்' எடுக்க நகையை கழற்றித் தரும்படி, அருணாவிடம் கேட்டுள்ளார். அவர், 3 சவரன் நகையை கழற்றிக் கொடுத்ததும், அங்கிருந்து மாயமானார். இதுகுறித்து, மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த வரலட்சுமி, 41, என்பவரை நேற்று கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 1.40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement