ஆணைக்குன்னம் சாலை படுமோசம் சீரமைக்க அதிகாரிகள் முன்வருவரா?

அச்சிறுபாக்கம்:எலப்பாக்கத்தில் இருந்து ஆணைக்குன்னம் வழியாக ஒரத்தி, மருதாடு, வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இதில், எலப்பாக்கம் -- ஒரத்தி சாலையில், ஆணைக்குன்னம் பகுதியில் சாலை படுமோசமாக உள்ளது.

ஆணைக்குன்னம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் இருந்து, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் அதிகம் பாரங்களை ஏற்றி செல்வதால், ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும், மழைக்காலங்களில் பள்ளங்களில் உள்ள ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, சாலையில் சிதறி கிடப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement