சினிமாவேண்டாம்: சுரேஷ் கோபிக்கு மோடி - அமித்ஷா அட்வைஸ்

திருவனந்தபுரம்: மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபிக்கு பிரதமர் மோடி- மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடந்து முடிந்த பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில், பா.ஜ,வைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். பின் திடீரென திரைப்படங்களில் நடிக்க இருப்பதால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் எனத் தெரிவித்ததாக செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள சுரேஷ் கோபி, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது பெருமை எனவும் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்ற நடிகர் சுரேஷ் கோபி, சுற்றுலா மற்றும் பெட்ரோலியத்துறை மத்திய இணை அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்பாக நடிக்கவிருந்த சில படங்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் நிலுவையில் உள்ளதாகவும், நடித்து முடித்துள்ள ‛ஒட்டக்கொம்பன்' என்ற படம் கடந்த செப்டம்பரில் வெளியாகாமல் உள்ளது. எனவே திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க இருப்பதால் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரதமர் மோடி சுரேஷ் கோபிக்கு பிரதமர் மோடி கூறியது, மத்திய அமைச்சராக இருந்து கொண்டு, சினிமாவில் நடிப்பது சரியாக இருக்காது, எனவே சினிமா வேண்டாம். அரசியலில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.இதே போன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவும் சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்க தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement