பயிர் காப்பீட்டிற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

புதுச்சேரி: நெல் சாகுபடி செய்த விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து, தட்டாஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, மத்திய அரசின், பசல் பிமா யோஜனா என்ற பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நெல், மணிலா, பயிறு வகைகள், கரும்பு, பருத்தி, வாழை ஆகிய பயிர்கள் காப்பீடு செய்யப்படுகின்றது.

இதில், விதைப்பு பொய்த்தல், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகள், பகுதி சார்ந்த பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு காப்பீடு வழங்கப்படுகின்றன.

விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகை முழுவதையும், புதுச்சேரி அரசு செலுத்துகின்றது.

ரபி பருவம் (சம்பா பருவத்தில்) நெல் சாகுபடி செய்த விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய, பூர்த்தி செய்த காப்பீடு விண்ணப்பங்களை, உழவர் உதவியகத்தில் பணிபுரியும் வேளாண் அலுவர்கள் மூலமாக, பொது சேவை மையத்தில் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement