ஸ்ரீவில்லிபுத்துார் கோயில்களில் இ----உண்டியல்கள் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அமைக்கப்பட்ட இ--உண்டியல்கள் துவக்க விழா நடந்தது.

முதுநிலை மண்டல மேலாளர் லட்சுமி நரசிம்மன் தலைமை வகித்தார். சிவகாசி கிளை மேலாளர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் சவுரவ் குமார் வரவேற்றார்.

ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்ட இ- உண்டியலை சடகோப ராமானுஜ ஜீயர் திறந்து வைத்தார். வைத்தியநாதசுவாமி கோயிலில் அமைக்கப்பட்ட இ- உண்டியலை மான்ராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசந்தி, அறநிலையத்துறை அலுவலர்கள் சக்கரையம்மாள், ஆவுடையம்மாள், முத்து மணிகண்டன், வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர். வங்கி ஆடிட்டர் ராம்ஜி நன்றி கூறினார்.

இந்த உண்டியல்கள் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், மிஷினில் உள்ள க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து தாங்கள் விரும்பும் காணிக்கையை செலுத்தினால் நேரடியாக கோயில் வங்கி கணக்கில் பணம் வரவு செய்யப்படும்.

Advertisement