பொறியாளர்களுக்கு  பொது மாறுதல் நெடுஞ்சாலைத்துறையினர் கோரிக்கை

விருதுநகர்: நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு பொது மாறுதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாரிமுத்து கூறினார்.

அவர் கூறியதாவது: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்களுக்கு மூன்றரை ஆண்டுகளாக பொது பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை.

செல்வாக்கு உள்ள பொறியாளர்கள் மட்டும் தனித்தனி உத்தரவாக விரும்பும் இடத்திற்கு மாறுதல் பெற்றுக்கொள்கின்றனர். செல்வாக்கு இல்லாத பொறியாளர்கள் ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கொடுமை தொடர்கிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு வெளிப்படையான பொது பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement