முகூர்த்த நாட்களில் ராமநாதபுரம் நகராட்சியில் மக்கள் அவதி
அவ்விடங்களில் போதுமான பார்க்கிங் வசதியின்றி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமப்படுவது தொடர்கிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோடு, ராமேஸ்வரம் ரோடு, பஸ்டாண்ட் ரோடு, உழவர்சந்தை ரோடு உள்ளிட்ட இடங்களில்வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் நிறைய உள்ளன. பஸ் ஸ்டாண்ட் - கேணிக்கரை ரோட்டில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் சுபமுகூர்த்த நாட்களிலும் ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.
அதேசமயம் மேற்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதிகள் இல்லை. இதன் காரணமாக முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நேற்று முகூர்த்த நாள் என்பதால் வழக்கம் போல உழவர் சந்தை ரோடு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோட்டில்கண்டபடிஇருபுறமும் வாகனங்களை நிறுத்தினர்.
இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
எனவே முகூர்த்த நாட்களில் ராமநாதபுரம் நகரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த மேற்கண்ட இடங்களில்கூடுதல் போலீசாரை நியமிக்க எஸ்.பி., சந்தீஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.